முகப்பு
தற்போதைய செய்திகள்

கினி நாட்டுப் பயணத்தை நிறைவு செய்து ஸ்வாஸிலாந்து புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஈக்குவடோரியல் கினி, ஸ்வாஸிலாந்து, ஜாம்பியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 5:43 PM
பகிர்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஈக்குவடோரியல் கினி, ஸ்வாஸிலாந்து, ஜாம்பியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

ஈக்குவடோரியல் கினி நாட்டுப் பயணத்தை இன்று (2018, ஏப்ரல் 9) நிறைவு செய்துவிட்டு, ஸ்வாஸிலாந்து நாட்டுக்குப் புறப்பட்டார். 

கினி நாட்டு அதிபருடன் நடத்தப்பட்ட விவாதத்தில் பரஸ்பர நலன்கள் சார்ந்த   இரு தரப்பு உறவுகள், மண்டல, உலகளாவிய பிரச்சினைகள் இடம்பெற்றன. இரு நாட்டு மக்களின் மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றுக்காக இந்திய – ஈக்குவடோரியல் கினி நாட்டு கூட்டாண்மையை விரிவு செய்யவேண்டும் என்று இரு தரப்பினரும் இசைந்தனர்.

Advertisement

ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டாம் கட்ட பயணத்தைத் தொடங்கும் வகையில் மூன்று புரிந்துணர்வு உடன்பாடுகளில் நேற்று கையெழுத்திட்டார். ஆயுஷ், பாரம்பரிய மருத்துவம், மருத்துவத் தாவரங்கள்  ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் குறித்த செயல் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது.

ஸ்வாஸிலாந்து, மற்றும் கினி நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தகது. 
 
இந்தப் பயணத்தை மேற்கொள்வதை முன்னிட்டு, ஓர் அறிக்கையையும் குடியரசுத் தலைவர் வெளியிட்டார். அதில், இந்தியாவிலிருந்து முதன்முதலில் ஈக்குவடோரியல் கினி நாட்டுக்குப் பயணம் செய்வது தனக்குப் பெரிய கவுரவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.