முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்

ரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 5:15 pm IST
பகிர்:

ரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 
ஐரோப்பிய நாடுகளுக்கு 5 பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஸ்வீடன் பயணத்தைமுடித்து, அங்கிருந்து இங்கிலாந்து புறப்பட்டார். 

இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஹீத்ரு நகரத்துக்குப் பிரதமர் மோடி சென்று சேர்ந்தார். இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை விமானநிலையத்தில் பூங்கொடுத்து வரவேற்றார்.

லண்டன் வாழ் இந்தியர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார்.

Advertisement

Advertisement

அதன்பின் காமென்வெல்த் அமைப்பில் உள்ள 52 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.  இந்நிலையில் GoBackModi என்ற பேனருடன் லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.