தற்போதைய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் சோகம்: மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் மினி லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக பலியாயினர்.

ANI

சித்தி: மத்தியபிரதேசத்தில் மினி லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில், ஒரு குழுவினர் திருமணம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி மினி லாரியில் சொந்த ஊர் வந்துகொண்டிருந்தனர். பாலத்தின் மீது லாரி சென்ற போது எதிர்பாரத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, 60 - 50 அடி கிழே ‛சோனே' ஆற்றுக்குள் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், மினி லாரியில் பயணம் செய்த 21 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். 

காமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சித்தி மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT