முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பையில் பதற்றம்: சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை

மும்பையின் கண்டிவாலி பகுதியில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:50 PM
பகிர்:

மும்பை: மும்பையின் கண்டிவாலி பகுதியில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையின் கண்டிவாலி பகுதியில் உள்ள கோகுல் நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் (40) என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது வாகனத்தை வழிமறித்த சச்சினை நோக்கி நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த சச்சினை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து குரர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்ரிக் தெரிவித்துள்ளார். 

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிவசேனா கட்சி பிரமுகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →