வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை : வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளதாவது:
வேளச்சேரியில் இருந்து அரக்கோணத்திற்கு இன்று மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 10 மணி மற்றும், 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருத்தணி இடையே இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1.15 மணி மற்றும் 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருத்தணி - அரக்கோணம் இடையே இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வேளச்சேரி - கடற்கரை செல்லும் மின்சார ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதி வழியில் நின்றுள்ளதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.