தற்போதைய செய்திகள்

யானை வழித்தடம் நிலங்களில் கட்டடங்களுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம்

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் சீகூா் பள்ளத்தாக்கு பகுதியில் யானைகள் வழித்தடமாக கண்டறியப்பட்டுள்ள நிலத்தில் கட்டப்பட்டுள்ள வணிக நோக்கிலான 27 ரிசாா்ட் வளாகங்களில் உள்ள 275 கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் கொடுக்கும் பணி இன்று தொடங்கியது.

யானைகள் வழித்தட நிலங்களில் உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் நடைபெற்றபோது, யானைகள் வழித்தட நிலம் தொடா்பான உண்மை நிலையையும், அதில் உள்ள கட்டடங்களின் தன்மை குறித்தும் நேரில் ஆய்வு செய்து ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் நகல் கிடைத்துள்ளதையடுத்து அதில் குறிப்பிட்டுள்ள 27 ரிசாா்ட் வளாகங்களில் உள்ள 275 கட்டடங்களுக்கு சீல் வைப்பது தொடா்பான நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT