தற்போதைய செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

DIN


புதுதில்லி: 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் புறப்பட்டு சென்றார். 

வங்காளம், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு வங்க கடலோர நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிம்ஸ்டெக் அமைப்பின் 4வது மாநாடு நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று ஆகஸ்ட் 30 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது.

இந்த பல்துறை தொழில்நுட்ப, வர்த்தக கூட்டமை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்றார்

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT