தற்போதைய செய்திகள்

ஆபாச நடிகைக்கு 1,30,000 டாலர் கொடுத்தஅமெரிக்க அதிபரின் வழக்கறிஞர்

DIN

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் தனது சொந்த பணத்தில் இருந்து 1,30,000 டாலரை ஆபாச நடிகை  ஸ்டீபனி கிளிஃபோர்டுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் டிரம்ப் அதிபராகும் முன்பே அவர் அந்த நடிகையுடன் பாலியல் உறவு வைத்திருந்தார் என்றும் டிரம்ப்பின் நிறுவனங்களில் இருந்தோ அல்லது கட்சி நிதியில் இருந்தோ பணம் வழங்கப்பட வில்லை என்று வழக்கறிஞர் மைக்கேல் கோயன் கூறியுள்ளார். அந்த பணத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் அவரிடம் இருந்து வாங்கவில்லை. 

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர்  தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே  கோஹென்பால் கிளிஃபோர்டுக்கு பணம் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே அந்த நடிகையை டிரம்புக்கு தெரியும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

மேலும் நியூயார்க் டைம்ஸ் முதலில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்தில், பொதுக் கூட்டமைப்பு, மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் நீதித் துறையுடன் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் 

கிளிஃபோர்டுக்கு பணம் வழங்கியது ஒரு விதி மீறல் என்று கூறியது. ஆனால்  செவ்வாயன்று கோஹனின் அறிக்கை அந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பண பரிமாற்றம் "சட்டபூர்வமானது" என்றும் "ஒரு பிரச்சார பங்களிப்பு அல்ல" என்றும் கூறினார். மேலும்  கடந்த மாதம் பணம் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியானதை டிரம்ப் கடுமையாக மறுத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT