தற்போதைய செய்திகள்

புதுமையான நிறுவனங்களின் பட்டியலில் 17- வது இடத்தில் உள்ளது ரிலையன்ஸ் ஜியோ

DIN

இந்தியாவின் புதிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம்,  அமெரிக்காவைச் சேர்ந்த வணிக பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வின் படி  2018 ஆம் ஆண்டுக்கான உலகின் 50 புதுமையான நிறுவனங்களின் வருடாந்திர தரவரிசையில் 17 வது இடத்தைப் பிடித்துள்ளது.  ஆப்பிள் நிறுவனம் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

கடந்த 2016- ஆண்டு செப்டம்பர் மாதம் தொலைத் தொடர்பு துறையில் நுழைந்த ஜியோ, அலைபேசி கட்டணத்தையும் டேட்டா கட்டணத்தையும் பெருமளவும் குறைத்ததோடு அறிமுக சலுகையாக நீண்டகால இலவச சேவையும் வழங்கப்பட்டது. இதன்மூலம் 

இந்தியாவில் மிக புதுமையான நிறுவனங்கள் வரிசையில் ஜியோ முதலிடத்தை பெற்றுள்ளது.அதுமட்டுமல்லாமல்  நெட்ஃபிக்ஸ், டென்சன், அமேசான், தி வாஷிங்டன் போஸ்ட், மார்வெல் ஸ்டுடியோஸ், ஸ்பேஸ் எக்ஸ், ஸ்பிடிஸ் மற்றும் வால்மார்ட் போன்ற பிற முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பட்டியலிலும் ஜியோ இடம்பிடித்துள்ளது. 

4G சேவைகளை மட்டுமே வழங்கும் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்தது. டெலிகாம் ரெகுலேட்டர் மூலம் கிடைத்த சமீபத்திய தரவுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 2017 க்குள் அதன் சந்தா பங்கீடு இருமடங்காக உயர்ந்து 13.71% ஆக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட 6.40% உயர்வாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT