தற்போதைய செய்திகள்

அமெரிக்காவின் அலாஸ்கா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 

DIN

அமெரிக்காவின் அலாஸ்கா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை  தொடர்ந்து மத்திய கடலோர மற்றும் வடகிழக்கு தீவு பகுதிகளில்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வாளர் கூறுகையில் 

கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி  கட்டாயம் செல்ல வேண்டும், மேலும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:31 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT