தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் சுட்டுக் கொலை: பெற்றோருக்கு சுஷ்மா ஆறுதல்

அமெரிக்காவில் கனாஸ் சிட்டியில் சுட்டுக் கொல்லப்பட்ட தெலங்கான மாணவரின் குடும்பத்தினருக்கு மத்திய வெளியுறவுத்துறை

ANI

புதுதில்லி: அமெரிக்காவில் கனாஸ் சிட்டியில் சுட்டுக் கொல்லப்பட்ட தெலங்கான மாணவரின் குடும்பத்தினருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரத் கோபு(26), அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள மிசெளரி பல்கலைகழகத்தில் கணின் மென்பொருள் என்ஜினியரிங் பட்ட மேற்படிப்பு பயின்று வருவதுடன், அங்குள்ள ஒரு உணவு விடுதியில் பகுதிநேர பணியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவு விடுதிக்கு வந்த ஒருவன், வாடிக்கையாளர் ஒருவரின் பணத்தை பறித்துக் கொண்டு ஓடியபோது, அதை சரத்கோபு தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சரத்கோபு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர் சம்பவத்தில், சந்தேக நபரின் வீடியோவை வெளியிட்டுள்ள அமெரிக்க போலீஸார், தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதனிடையே தெலங்கானா மாணவர் சரத் கோபுவின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது இதயப்பூர்வமான இரங்கல் தெரிவித்தார்.  

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்க பதிவில், கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தார் அமெரிக்கா செல்ல விரும்பினால் அதற்கான விசா ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், மேலும், மாணவரின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும். துயரத்தில் இருக்கும் குடும்பத்தினற்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT