புதுதில்லி: உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டின் முன்னாள் என்.டி.திவாரியின்(92) உடல்நிலை கவலக்கிடமாக உள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று முதல் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் பழுதடைந்தது. இதையடுத்து அவருக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து அவரது மகன் ரோஹித் சேகர் திவாரி கூறுகையில், ‘எனது தந்தையின் உடல் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. மருத்துவமனையில் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் என இரு மாநிலங்களில் முதல்வராகப் பதவி வகித்த ஒரே இந்தியர் திவாரி.
- 1976-77, 1984-85, பின்னர் 1988-89 வரை உத்தரபிரதேச முதல்வராக பணியாற்றினார். அவர் 2002 முதல் 2007 வரை உத்தரகண்ட் முதல்வராகவும் பணியாற்றினார்.
- 1986-1987 ஆண்டுகளில் பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
- 2007 முதல் 2009 வரை ஆந்திரா ஆளுநராக பணியாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.