கிம் ஜோங் - டிரம்ப் சந்திப்புக்கு சிங்கப்பூர் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா..?
உலக நாடுகள் உற்று நோக்கிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சரித்திர சிறப்பு வாய்ந்த
உலக நாடுகள் உற்று நோக்கிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சரித்திர சிறப்பு வாய்ந்த சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடந்தேறியது. உள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக, எதிர்எதிர் துருவங்களாக திகழும், அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்கள் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை இந்திய நேரப்படி 6.30 மணியளவில் சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பரஸ்பரம் கைகுலுக்கிய வண்ணம் போஸ் கொடுத்தனர்.
சுமார் 48 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது உலக நாடுகள் உற்று நோக்கிய சரித்திர சிறப்பு வாய்ந்தவை.
இந்த சந்திப்பின் மூலம் அணு ஆயுத சோதனை, பொருளாதார தடை போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என இரு நாட்டு தலைவர்களும் கூறியுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது.
இரு நாட்டு தலைவர்களின் சரித்திர சிறப்பு வாய்ந்த சந்திப்புக்காக, நான்கு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டுக்காக சிங்கப்பூர் அரசு ரூ.101 கோடியை செலவிடுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். இந்த செலவு தொகை முழுவதையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு மதிய உணவு பரிமாறப்படுகிறது. இதற்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்துள்ள மதிய உணவு குறித்து பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் அவற்றின் பிரதிநிதிகளும் ஒருவரையொருவர் எதிர்எதிரில் பார்க்கும் வகையில் ஒரு நீண்ட வெள்ளை மேஜையின் இரு பக்கங்களிலும் அமர்ந்துள்ளனர். மேஜை பச்சை மற்றும் வெள்ளை பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பட்டியலில், மேற்கத்திய, ஆசிய உணவுகள் கலவையாக பாரம்பரியமிக்க இரால் கோர்டெய்லுடன் அவகடோ சலாட், பச்சை மாங்காய் கெரபுடன் ஹனி லாம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ். இவற்றுடன் வெள்ளரிக்காய், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படும் கொரிய நாட்டின் புகழ்பெற்ற "ஓசோன்" என்ற டிஷ் ஒன்றும் ஸ்டார்டராக பரிமாறப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
இவைதவிர ஃபீப் ஷார்ட் ரிப் கான்பிட் எனப்படும் ஒயின் ஊற்றி செய்யப்படும் உணவு, பிரக்கோலியுடன் உருளைக்கிழங்கு டூபிலினோஸ், சிவப்பு ஒயின் சாஸ், பன்றிக்கறியுடன் கூடிய யாங்கோஜ் ஃப்ரைட் ரைஸ், சில்லி சாஸ், "டாஜு ஜொரிம்" சோயா, முள்ளங்கி, மீன் மற்றும் காய்கறிகள். டார்க் சாக்லெட் டார்ட்லெட் கனாசே, வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரி கவுலிஸ் டிராபிஜின்னே ஆகியவை சாப்பாட்டுக்கு பிந்திய உணவு ஆகும்.
இந்த ராயல் சாப்பாடு வகைகளின் சுவைக்குதான் சிங்கப்பூர் அரசு முக்கியத்துவம் தந்துள்ளதாக கூறப்படுகிறது.