தற்போதைய செய்திகள்

ஹவானாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை

DIN

ஹவானா:  அரசுமுறைப் பயணமாக கியூபா சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அதிபர் மிகுவெல் டையஸ் கனெலை இன்று சந்தித்துப் பேசினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் கியூபா வந்தடைந்தார். இந்நிலையில், இன்று ஹவானாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கியூபா நாட்டின் அதிபர் டையஸ் கனெலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக கியூபாவும் தனது ஆதரவை எப்போதும் தெரிவிக்கும் என அதிபர் டையஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT