தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

DIN

பிஜப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் புஜரிகன்கேர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா காவல்துறையினர் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புஜரிகன்கேர் பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். 
தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி ஜார்கண்ட் பாலமு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த ஒரு தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT