தற்போதைய செய்திகள்

சித்தூர் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே

DIN

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்வதற்காகன காரில் திருப்பதிக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் மாதவ நகர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, கார் ஓட்டுநர் முன்னாள் சென்றுகொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 4 பேரும் சிந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரொம்ப பார்க்காதீங்க... பூனம் பாண்டே!

புது டிரெண்ட்... வைஷ்ணவி!

கொஞ்சம் ஹைட் அன்ட் ஸீக், கேமராவுக்கு... தமன்னா!

லயோலா கல்லூரி, சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி!

நன்றி என்பது உள்ளொளி... சீரத் கபூர்!

SCROLL FOR NEXT