தற்போதைய செய்திகள்

ராம நவமி ஊர்வலத்தில் பட்டாக் கத்திகளுடன் வந்த இந்துத்துவா இயக்கங்கள்!

ராம நவமி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா இயக்கங்கள் நடந்திய பேரணிகளில் பயங்கர பட்டா கத்திகளுடன்

DIN

சிலிகுரி: ராம நவமி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா இயக்கங்கள் நடந்திய பேரணிகளில் பயங்கர பட்டா கத்திகளுடன் இந்துத்துவா இளைஞர்கள் ஊர்வலமாக வந்துள்ளனர். 

ராமநவமி நாளையொட்டி பல இடங்களில் இந்துத்துவா இயக்கங்கள் பேரணிகள் நடத்தின. இதில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடந்த பேரணியில் இந்துத்துவா இளைஞர்கள் பயங்கர பட்டாக் கத்திகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்துள்ளனர்.

அதேபோன்று உத்தரப்பிரதேசத்தின் லகாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்திலும் பட்டாக் கத்திகளை உயர்த்தி பிடித்தபடி ஆக்ரோஷத்துடன் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் பெண்கள் பட்டாக் கத்திகளுடன் இந்துத்துவா கோஷங்களை எழுப்பியது கடும் சர்ச்சையாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT