கொரிய உச்சிமாநடு -2018 அடுத்தமாதம் நடைபெறும்: இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல்
வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டு தலைவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 27ம் தேதி சந்திக்க உள்ளனர்.
வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டு தலைவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 27ம் தேதி சந்திக்க உள்ளனர்.
கொரிய உச்சிமாநடு -2018 அடுத்தமாதம் நடைபெற உள்ளது. இதற்கு இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். பன்முன்ஜோமில் உள்ள தெற்கு அமைதி இல்லத்தில் இந்த உச்சிமாநாடு நடைபெற உள்ளதாக இருவரும் கூட்டாக வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிகழ்ச்சி நிரல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள அதிகாரிகள் தரப்பு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன்பு கடந்த 2000 ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டில் கொரியா உச்சி மாநாடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement