முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழக மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

உச்ச நீதிமன்ற கெடுப் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது. மத்திய,

Updated On : 29 மார்ச், 2018 at 8:59 PM
பகிர்:

உச்ச நீதிமன்ற கெடுப் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, உச்சநீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக  பல்வேறு கட்சியினர் பலவிதமான கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். 

Advertisement

அந்த வகையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து கூறுகையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.