திருவண்ணாமலை அருகே சாலை விபத்து: 2 பேர் பலி - 8 பேர் படுகாயம்
போளூர் அடுத்த எட்டிவாடி பகுதியில் ஆட்டோவும், காரும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM
போளூர் அடுத்த எட்டிவாடி பகுதியில் ஆட்டோவும், காரும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எட்டுவாடி அருகே ஆட்டோ ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாரத விதமாக எதிரே வந்த காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்றும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement