முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க, அமித்ஷா திட்டம்: முக்கிய தலைவர்களுடன் இன்று கட்சி அலுவலக கூட்டம்

பாஜக தலைவர் அமித் ஷா இன்று கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர் பலர் கலந்து கொள்ள 

Updated On : 14 மே, 2018 at 10:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

பாஜக தலைவர் அமித் ஷா இன்று கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்றைய கூட்டத்தில்  2019 மக்களவைத் தேர்தல்கள் உட்பட பல தொடர்ச்சியான தேர்தல்களுக்காக கட்சி மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. 

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க, அமித்ஷா திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 

Advertisement

அதற்காகான முயற்சியில், அகில இந்திய பாஜக வேகமாக களம் இறங்கும் என, ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல, கர்நாடக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, கட்சி தேசியத் தலைவர் அமித்ஷா களம் இறங்கி உள்ளார். 

முன்னோட்டமாக தமிழக பாஜக தலைவர்களிடம் பேசியிருக்கிறார். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க மாநிலத்தில் இதுவரை அவர்கள் திரட்டி வைத்திருக்கும் தகவல்களை, அனுப்பி வைக்குமாறு கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.