முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசா என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 தீவிரவாதிகள்

Updated On : 14 மே, 2018 at 4:44 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் கோலங்கி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நேற்று போலீஸாரும், சிறப்பு  பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று மாவோயிஸ்டுகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். 

இதனை அறிந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இச்சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

Advertisement

இதேபோல் பலாங்கிர் மாவட்டம் தட்காமல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் மற்றொரு மாவோயிஸ்டு கும்பல் கூடி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் சங்கர் மஜ்கி(37) என்பவரின் தலைக்கு ரூ.5 லட்சம் அரசு பரிசு அறிவித்திருந்த நபர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதனிடையே இன்று கந்தமால் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நடந்த துப்பாக் சூட்டில் ஒரு மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.  

இதுவரை நான்கு பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் உறுதி செய்யப்பட வில்லை.

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏ.கே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகள், 11 துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.