முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து

தில்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீப்பற்றியது.

Updated On : 21 மே, 2018 at 1:19 PM
பகிர்:

தில்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீப்பற்றியது. ரயிலில் தீப்பிடித்த உடனே பயணிகள் இறக்கி விடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

தீயணைப்பு துறையினர் உதவியால் தீ கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டது. மத்திய பிரதேசம் குவாலியரில் தீவிபாத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீப்பற்றிய உடனே ரயில் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளை வெளியேற்றி தீயணைக்கும் பணியில் ஈடுபட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்து வருகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.