தற்போதைய செய்திகள்

ரஷியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

ANI

புதுதில்லி:  ரஷிய அதிபர் புதினுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியில் இருந்து ரஷ்யாவின் சோச்சி நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இந்த பயணத்தின்போது சோச்சி நகரில் புதினும், மோடியும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது இந்தியா மற்றும் ரஷியாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளின் நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், விரைவில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு மற்றும் பிரிக்ஸ் அமைப்பு மாநாடு ஆகியவை குறித்தும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையால், இந்தியா-ரஷியா இடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்பட சாத்தியமிருப்பதாக கூறப்படுவது குறித்தும், இந்தியா-ரஷியா இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பை 3-ஆவது நாட்டுக்கு விரிவுப்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்டவை குறித்தும் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்

சீனாவுக்கு பிரதமர் மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, இன்று ரஷியாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.  

இந்த 2 பயணங்களும், முன்கூட்டியே திட்டமிடப்படாத சுற்றுப்பயணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT