ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சிகிபோரா பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலரது நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர், மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட இதர விபரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.