தற்போதைய செய்திகள்

பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் 

கழகங்கள் இல்லாத தமிழகத்தை நாம் கண்டாக வேண்டும். அது வந்தால் தான் தமிழகத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியை காண முடியும்.

DIN


நாகர்கோவில்: மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா நிவாரண நிதி தொடர்பாக நிதியமைச்சர் அருண்ஜேட்லியிடம் பேசியுள்ளேன். மத்திய குழு ஆய்வை முடித்துவிட்டு அறிக்கையை சமர்ப்பித்த பிறகு அது தொடர்பாக அமைச்சரவை கூடி முடிவெடுக்கும்.

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. தற்போது உள்ள காலம் கூட்டணி காலம். தமிழகத்தில் கூட்டணிக்கு பழக்கப்பட்டுள்ளனர். வேறு மாநிலங்களில் இந்த நிலை இல்லை என்றவர் இன்றைய கால கட்டத்தில் தேர்தல் சூழல் என்பது கூட்டணி இல்லாமல் முடியாது. காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்த கட்சி திமுக. ஆனால், அவர்களுடன் தான் திமுக கூட்டணி வைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை அணுக வேண்டும் என்ற நிலையில் தான் அனைத்து கட்சிகளும் உள்ளன.

கழகங்கள் இல்லாத தமிழகத்தை நாம் கண்டாக வேண்டும். அது வந்தால் தான் தமிழகத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியை காண முடியும். ஒவ்வொரு தமிழனும் இதை உணர வேண்டும் என்றார்.

மேலும், மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும் என கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT