அசாம் மாநிலத்தில் யானையிலிருந்து தவறி விழுந்த துணை சபாநாயகர்!
அசாம் மாநில துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிபாநாத் மல்லா, யானை மீதிருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை
தற்போதைய செய்திகள்அசாம் மாநிலத்தில் யானையிலிருந்து தவறி விழுந்த துணை சபாநாயகர்!
அசாம் மாநில துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிபாநாத் மல்லா, யானை மீதிருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை
கவுகாத்தி: அசாம் மாநில துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிபாநாத் மல்லா, யானை மீதிருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராதாபரி தொகுதியின் பாஜக எம்எல்ஏவான கிருபாநாத் மல்லா, அசாம் சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக சொந்த தொகுதிக்கு வந்த அவரை உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை யானையின் மீது அமர்த்தி ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
ஆதரவாளர்களின் முழக்கங்கள், பட்டாசு வெடிக்கும் சத்தம் போன்றவற்றால் யானை மிரண்டது. ஒரு கட்டத்தில் நின்று விட்ட யானை, பின்னர் திடீரென தன் உடலைக் குலுக்கியபடி நகரத் தொடங்கியபோது, பாகனும், கிருபாநாத்தும் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். உடனே கீழே விழுந்த கிருபநாத்தை அவரது ஆதரவாளர்கள் ஓடி வந்து தூக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். யானை சவாரியின் மீதான ஆசையைத் துறந்து, திறந்தவெளி ஜீப்பில் ஏறி ஊர்வலத்தை தொடர்ந்தார்.
யானையின் பக்கவாட்டில் விழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். யானை மீதிருந்து அவர் விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.