தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்குப்பதிவு

DIN

புதுதில்லி: சிபிஐ இயக்குநர், சிபிஐ சிறப்பு இயக்குநர் இடையே அதிகார மோதல் நிலவி வந்த நிலையில், பல கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பண மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சிக்கி உள்ள தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கை விசாரணை நடத்தும் குழுவின் தலைவரான ராகேஷ் அஸ்தானா, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இவ்விவகாரத்தில் இடைத்தரகர் மனோஜ் குமார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக  அளித்த வாக்குமூலத்தின் மூலமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் சமந்குமார் கோயலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ அதனுடைய சிறப்பு இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்வது முன்னெப்போதும் இல்லாத சம்பவமாக பார்க்கப்பட்டாலும், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வது அஸ்தானாவுக்கு இது முதல்முறை அல்ல. 

ராகேஷ் அஸ்தானா, 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது -சசி தரூர் கணிப்பு

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

கொல்கத்தாவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தைப் பகிர்ந்த நிதீஷ் ராணா!

மஹிக்காக.. ஜான்வி கபூர்!

SCROLL FOR NEXT