தற்போதைய செய்திகள்

அனைத்துக் காவல் நிலையங்களிலும் நூலகம் அமைக்கப்படும்:  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

DIN


கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவை மாநகர காவல் துறை மற்றும் அரிமா சங்கம் சார்பில் மாநகரில் உள்ள 24 காவல் நிலையங்களில் நூலகம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழா உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தமிழக காவல் துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. காவல் நிலையங்களில் நூலகம் அமைக்கும் திட்டமானது மிகச் சிறந்த திட்டம். இதன் மூலமாக மன உளைச்சலுடன் காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் காவலா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கோவை புகா் மற்றும் மாநகா் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முதல்வரிடம் பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT