தற்போதைய செய்திகள்

இரட்டை சட்ட முறையை மாநில அரசு உபயோகிப்பது சரியல்ல: முத்தரசன் பேட்டி

DIN



திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டத்தை இருவிதமாக பிரித்து ஆட்சி நடப்பது சரியானதல்ல என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவர் கூறுகையில், மத்திய-மாநில அரசுகள் ஊழல் மிகுந்தவைகளாக மாறிவிட்டன. சமூகத்தில் தாக்கத்தையும், பிரச்னையையும் ஏற்படுத்தும்படி பேசிபவா்கள் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்குவது சரியானதல்ல. 

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எஸ்.வி.சேகா், ஹெச்.ராஜா போன்றவா்கள் பாஜகவினா் என்பதால் கைது செய்யப்படாமல் உள்ளனர்.  அதேநேரத்தில் மற்ற கட்சியினர், சாமானியா்கள் மீது உடனுக்குடன் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்கிறார்கள். தமிழகத்தில் சட்டத்தை இருவிதமாக பிரித்து மாநில அரசு உபயோகிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள மத்திய-மாநில அரசுகளை வீழ்த்த மக்கள் முடிவு எடுத்துவிட்டனா் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT