தற்போதைய செய்திகள்

கோனார்க் போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மரியாதை

இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தியதன் 2-வது ஆண்டு தினத்தை ஒட்டி ராஜஸ்தான் மாநிலம் கோனார்க்கில் உள்ள போர் நினைவு

DIN


ஜோத்பூர்: இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தியதன் 2-வது ஆண்டு தினத்தை ஒட்டி ராஜஸ்தான் மாநிலம் கோனார்க்கில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

2016 -ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம், அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. 

இந்நிலையில், நாளை இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதின் இரண்டாவது ஆண்டு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கோனார்க் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்த பார்வையாளர்கள் வருகை புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர், அங்குள்ள ராணுவ பள்ளியில் அமைப்பட்டுள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் மோடி ஏற்றுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT