தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - ஆகஸ்ட் 10-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தியின் ராஜிநாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யாரை தேர்வு

DIN


காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தியின் ராஜிநாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யாரை தேர்வு செய்யப்படலாம் என்பது குறித்து வரும் 10 -ஆம் தேதி தில்லியில் நடைபெறும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். ராஜிநாமா முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் வலியுத்தியபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார் ராகுல்காந்தி. 

இதையடுத்து அடுத்ததாக தேசிய தலைவர் பதவியை ஏற்று, காங்கிரஸ் கட்சியை சரிவில் இருந்து மீட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போகும் திறமையான அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

இதனிடையே இந்திரா குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அடுத்த தேசிய தலைவராக தேர்வு செய்யப்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு கட்சி சிதைந்துவிடும் என மூத்த தலைவர்கள் எல்லாம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு தலைவர் பதவி அளிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 10-ஆம் தேதி தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது  குறித்தும் காஷ்மீர், கர்நாடக விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT