தற்போதைய செய்திகள்

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ.29,000 கோடி உயர்வு

DIN


ஆசியாவின் கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ.29,000 கோடியாக உயர்ந்துள்ளதை அடுத்து அவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை மும்பையில் நடைபெற்றது. அப்போது ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ரசாயனப் பொருட்களின் 20 சதவீத பங்குகளை சவூதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோ நிறுவனத்துக்கு விற்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன்களை அடுத்த 18 மாதங்களுக்குள் முற்றிலும் குறைக்க திட்டமிடப்பட்டது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஜியோ ஃபைபர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11 சதவீதம் உயர்ந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ. 29,000 கோடிக்கு உயர்ந்துள்ளது. 

ஆண்டு கூட்டத்திற்கு முன்பு நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.1,162 கோடியாக இருந்தது. ஆண்டு கூட்டம் முடிந்த 2 நாட்களில் கடந்த புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ரூ.1,288.30 கோடியாக உயர்ந்தது. இதனால் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.28.684 (4 பில்லியன் டாலர்) கோடியாக உயர்ந்துள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 49.9 பில்லியன் டாலர். ஆசியாவின் கோடீஸ்வரர் ஒரு ஆண்டின் அடிப்படையில் 5.57 டாலர்களை ஈட்டியுள்ளார். இதனால் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவர் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற "டைம்' பத்திரிகை, "2019-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்கவர்களின்' பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT