தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக

DIN


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் வெயில் காய்ந்த நிலையில் மாலையில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. 

இதனிடையே, வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளாதால், வங்க கடலில் தென்கிழக்கு மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் வருகிற 2 ஆம் தேதி வலுப்பெறக்கூடும் என்றும், இதனால் அடுத்த 72 மணி நேரத்தில் அந்தமான் நிகோபர், கேரளா மற்றும் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

SCROLL FOR NEXT