ஓசூர் மற்றும் நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல்
ஒசூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகிறது.
சென்னை : ஒசூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகிறது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நாகர்கோவில் மற்றும் ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார்.
Advertisement
Advertisement
மேலும், நெகிழி தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான சட்டமசோதாவும் இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகிறது.