தற்போதைய செய்திகள்

முதல்போக பாசனத்தேவைக்காக ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து பாசனத்தேவைக்காக இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

DIN

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து பாசனத்தேவைக்காக இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

முன்னதாக பொள்ளாச்சி கால்வாய், வேட்டைகாரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய்களில் இருந்து முதல்போக பாசனத்தேவைக்காக தண்ணீர் திறந்துவிடும்படி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, இன்று முதல் இடைவெளி விட்டு 70 நாள்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 250 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆழியாறு அணையில் இருந்து  தண்ணீர் திறந்து வைத்து, அதனை மலர் தூவி வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT