முகப்பு
தற்போதைய செய்திகள்

‏விநாயகர் சதுர்த்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:

   
புதுதில்லி: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகள். விநாயக பெருமான் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அருள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →