தற்போதைய செய்திகள்

'கர்வி குஜராத் பவனை' திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

DIN


புதுதில்லி: தில்லியில் 'கர்வி குஜராத் பவனை' பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குஜராத்தில் முதல்வராக இருந்த நாட்களை நினைவு கூர்ந்து பேசினார். 

குஜராத் மாநில கலாச்சார முறையில் தில்லி அக்பர் சாலையில் ரூ.131 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள "கர்வி குஜராத் பவன்" பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கர்வி குஜராத் பவனில் 19 தனி அறைகள், 59 சாதாரண அறைகள், உணவு அருந்தும் இடம், ஹோட்டல், பிசினஸ் சென்டர், கான்ஃபரன்ஸ் அறை, உடற்பயிற்சி நிலையம், யோகா செய்யும் இடம், நூலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான 7066 சதுர மீட்டர் நிலத்தை மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்படத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், 12 முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களில் சிலரை நான் காண்கிறேன். குஜராத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த முகங்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் இந்த நாடாவை வெட்டியிருக்கலாம். ஆனால் நான் உங்களை எல்லாம் சந்திக்க முடிந்ததற்கும், இந்த வாய்ப்பு கிடைத்ததற்கும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி, அரசு நிறுவனங்களில் 'சரியான நேரத்தில் திட்டங்களை முடிக்கும் கலாச்சாரம்' காணப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறந்த குஜராத் இல்லம் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தைவிட ஒருமாதம் முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. மேலும், 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்படுத்தாமலும், நவீன மற்றும் பாரம்பரிய கட்டடக் கலையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகிறேன். சரியான நேரத்தில் திட்டங்களை முடிக்கும் பழக்கம் அரசாங்க நிறுவனங்களில் வளர்ந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புதிய இந்தியாவை மனதில் கொண்டு இந்த குஜராத் இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து புதிய உச்சங்களைத் தொட வேண்டும்.

மத்திய மற்றும் மாநிலம் இரண்டிலும் பாஜக அரசுகள் அமைக்கப்பட்டுள்ளதால், குஜராத்தின் வளர்ச்சியில் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. 

'கார்வி குஜராத் பவன்' கட்டிடம் குட்டி-குஜராத்தின் மாதிரியாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் இது புதிய இந்தியாவுக்கு ஒரு சான்றாகும், நாம் ஒன்றாக இணையும்போது முன்னோற்றம் குறித்து பேசுகிறோம். நவீனமயமாக்கல், கலாச்சார பாரம்பரியத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டும் மற்றும் உச்சத்தைத்தொட விரும்புகிறோன்." என்று கூறினார்.

கார்வி குஜராத் பவான் திறப்பு விழாவில் பழைய காலங்களை நினைவுபடுத்து பேசிய மோடி, குஜராத் முதல்வராக இருந்த நாட்களை நினைவு கூர்ந்தவர் அது ஒரு ஏக்கம் நிறைந்த தருணம் அன்று கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT