தற்போதைய செய்திகள்

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள்: அதை சொன்ன தமிழர் யார் தெரியுமா? 

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள், கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தமிழை புகழ்ந்தபோது

DIN


சென்னை: நன்றி மறந்தவர்கள் தமிழர்கள், கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தமிழை புகழ்ந்தபோது அதைக்கொண்டாடவில்லை என்று தமிழரும் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். 

அமித் ஷாவின் கருத்துக்கு தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று சென்னையில் முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாடத் தெரியாதவன் தமிழன்.

சமஸ்கிருதத்தை விட, பழமையான மொழி தமிழ் என மோடி பேசியதை தமிழர்கள் ஏன் கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன், உலகளவில் தமிழின் பெருமையை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவாரியா கொள்ளையா்கள் வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும்

முதியவரிடம் ரூ. 4 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

அரசு மருத்துவமனையில் இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

இரட்டை ரயில் பாதைப் பணி: தோட்டியோடு-மடவிளாகம் நெடுஞ்சாலை நவ. 24 முதல் மூடல்

கைப்பேசி பயன்பாடு: மாணவா்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் - அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுரை

SCROLL FOR NEXT