தற்போதைய செய்திகள்

மும்பைக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

DIN


மும்பை: மும்பையில் இன்று வியாழக்கிழமை (செப்.19) கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம், ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பை புறநகர் பகுதி, நவி மும்பை, தானே மற்றும் மும்பையின் வடக்கு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. மும்பையின் தெற்கு பகுதிகளில் இரவு 10.30 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. 

மும்பை புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல், இரவு 10.30 மணி வரை 54 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தெற்கு மும்பையில் 2.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

இந்நிலையில், மும்பை மற்றும் ராய்காட்டில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்றும், தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

மேலும் மும்பையில் பொதுவாக வானம் மேகமூட்டமாகவும், மிதமான மழையும் பெய்யக்கூடும். நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையா அடுத்து மும்பை, தானே மற்றும். பால்கர், கோன்கான் பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை (செப்.19) விடுமுறை அறிவித்து மஹாராஷ்டிர மாநில பள்ளி, கல்வித்துறை அமைச்சர் ஆஷிஸ் செலார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT