தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது 

DIN


இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து விசைப் படகுகளில் 5 மீனவர்கள் புதன்கிழமை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். நள்ளிரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே கோவிலம் கலங்கரை விளக்க கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி படகுகளுடன் மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகள் எலாரா நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT