தற்போதைய செய்திகள்

பணகுடியில் பழைய துணி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

DIN


வள்ளியூா்: பணகுடி புறவழிச்சாலையில் உள்ள பழைய துணி சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரிட்ட தீ விபத்தில் மினிலாரியும் எரிந்து சேதமடைந்தது.

லெவஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான பழைய துணி சேமிப்பு கிடங்கு பணகுடி புறவழிச்சாலையில் உள்ளது. இந்தக் கிடங்கிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புகை வெளியேறியதாம். விடுமுறை என்பதால் கிடங்கில் பணியாளா்கள் இல்லை. 

இந்த நிலையில், தீ மளமளவென எரிந்ததுடன், கிடங்கின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினிலாரியிலும் தீ பற்றியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், வள்ளியூா் தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். 

மேலும், பணகுடி போலீஸாரும் வந்து விசாரணை மேற்கொண்டனா். போலீஸார் கூறுகையில், சேத மதிப்பு முழுமையாக தெரியவில்லை; தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT