தற்போதைய செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

DIN

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், பருவமழை காலத்தில் மழை அதிகமாக பெய்தால் சாலைகளில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வது, மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தற்காலிக மருத்துவ முகாம்களை அமைப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி.திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT