தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது

DIN



உலக அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.  

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை ஒரே நாளில் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இத்தாலியில் 727 பேரும், ஸ்பெயினில் 667 பேரும் மற்றும் பிரான்ஸில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்க்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 1லட்சத்து 94 ஆயிரத்து 277 பேர் நோய்த்தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

இத்தாலியில் மட்டும்  13 ஆயிரத்து 155 பேரும், ஸ்பெயினில் 9 ஆயிரத்து 387 பேரும், அமெரிக்காவில் 5 ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ளள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT