தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 2017 பேர் கைது

DIN


திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரையில் 2017 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து செயல்படுத்தி வருகின்றன. இதையொட்டி தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. 

  144 தடை உத்தரவை மீறியதாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  2017 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  மேலும் 1875 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

  கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 18 பேர் வெளியிடங்களில் சுற்றி திரிந்ததாக, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT