முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: தமிழகத்துக்கு அதிகமான நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்துக்கு ஏன் அதிகமான நிதியை ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

சென்னை: இந்தியாவில் கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்துக்கு ஏன் அதிகமான நிதியை ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர் ராஜேந்தர் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும்போது ரூ.510 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியாக இருக்காது.

மேலும் கரோனா தொற்று குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு அதிகமான தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்கியது என கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்து, இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →