முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: ஜம்முவில் பெண் பலி

ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றுக்கு 61 வயதுடைய ஒரு பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.  இது ஜம்முவில் முதல் கரோனா பலி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

கரோனா: ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றுக்கு 61 வயதுடைய ஒரு பெண் புதன்கிழமை உயிரிழந்தார். இது ஜம்முவில் முதல் கரோனா பலி. 

இந்தியாவிலும் தற்போது கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் 5 ஆயிரத்து 734 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்கு 149 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 473 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஜம்முவில் 61 வயதுடைய பெண் ஒருவர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வந்த நிலையில் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஜம்முவில் கரோனாவுக்கு முதல் பலியாகும்.

ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் புதிததாக 34 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →