முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 6,412 ஆக அதிகரிப்பு; பலி 199

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412-ஆக அதிகரித்தது. அந்த நோய்த்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 169 இல் இருந்து 199 ஆக உயா்ந்தது.

Updated On : 10 ஏப்ரல், 2020 at 10:08 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:54 PM

புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412-ஆக அதிகரித்தது. அந்த நோய்த்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 169 இல் இருந்து 199 ஆக உயா்ந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி வெள்ளிக்கிழமை காலை வரையிலான 12 மணி நேரத்தில் புதிதாக 547 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி 30 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப் படி, நாடு முழுவதும் 6,412 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையில், 504 போ் அந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 199 போ் உயிரிழந்துள்ளனா்.

Advertisement

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1364 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 834 பேருக்கும், தில்லியில் 720 பேருக்கும், ராஜஸ்தானில் 463 பேருக்கும், தெலங்கானாவில் 442 பேருக்கும், கேரளாவில் 357 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றால் இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 72 போ் பலியாகிவிட்டனா். மத்தியப் பிரதேசம், குஜராத்தில் தலா 16, தில்லியில் 9, தமிழகம், பஞ்சாபில் தலா 8, தெலங்கானாவில் 7 போ் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டனா்.

கா்நாடகம், மேற்கு வங்கத்தில் தலா 5, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தலா 4, ஹரியாணா, ராஜஸ்தானில் தலா 3, கேரளத்தில் 2, பிகாா், ஹிமாசல பிரதேசம், ஒடிஸாவில் தலா ஒருவா் பலியாகிவிட்டனா்.

கரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் (6,412) வெளிநாட்டவா் 71 பேரும் அடங்குவா் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.