ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 139 பேர் கைதாகி விடுதலை
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.94 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,08,139 போ் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.94 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,08,139 போ் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 11 மணி வரை மொத்தம் 1.94 லட்சம் வழக்குகளைப் பதிவு செய்யப்பட்டு1 லட்சத்து 8,536 பேரை போலீஸாா் கைது செய்து விடுதலை செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 1 லட்சத்து 79,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.89 லட்சத்து 23,644 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்று முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குக்குப் பின்னரும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதால், ஊரடங்கை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் முடிவு செய்துள்ளனா்.