முகப்பு
தற்போதைய செய்திகள்

இளையான்குடி அருகே  அரசு பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல்நாட்டு விழா

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கீழநெட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக வகுப்பறைக் கட்டடம் கட்ட சனிக்கிழமை அடிக்கல்நாட்டு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
இளையான்குடி அருகே  அரசு பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல்நாட்டு விழா
பகிர்:

மானாமதுரை, ஆக1: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கீழநெட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக வகுப்பறைக் கட்டடம் கட்ட சனிக்கிழமை அடிக்கல்நாட்டு நடைபெற்றது.

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.நாகராஜன் இந்த வகுப்பறைக் கட்டடம் கட்ட தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 21 லட்சம் வழங்கியுள்ளார்.

இதையடுத்து நடைபெற்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார், தமிழக காதி கிராமத்தொழில்கள்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் அதிமுக மானாமதுரை, இளையான்குடி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சிவசிவ தரன், பாரதிராஜன், கோபி, மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் முனியான்டி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பர்ணபாஸ், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →